மண்டைக்காடு அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
குளச்சல் : - மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடைவிழாவை முன்னிட்டு நாளுக்கு நாள் கேரளமாநில பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் திருவிழா சீசன் களை கட்டியுள்ளது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழா வரும் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு மாசிமாதம் ஒன்றாம் தேதி முதலே கேர ளமாநிலத்திலிருந்து 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டேந்தி அதிக அளவு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் பகதர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதால் மாசிகொடைவிழா சீசன் களை கட்டியுள்ளது. இதனால் பொங்கல்வழிபாடு செய்யும் பந்தலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மண்டைக்காடு கடற்கரையிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த ஆண்டைவிட பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது. மாசி கொடைவிழா நாள் நெருங்கநெருங்க கேரளமாநில பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ், மெடிக்கல் சேவையில் குறைபாடு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி ஒன்றாம்தேதியான கடந்த வாரம் திங்கட்கிழமை முதலே கேரள மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இத àல் மண்டைக்காடு கோயி லைச்சுற்றியும், கடற்கரைப்பகுதி, மண்டை க்காடு சாஸ்தாகோயில் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. ஆனால் பாதுகாப் புப்பணிக்கு இர ண்டு முதல் மூன்று போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர். பெண்பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது ஆனால் பெண்போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. கோயில் வளாகத்தில் திருவ னந்தபுரம், கிளிமானூரைச்சேர்ந்த ஷீபா(30) என்ற பக்தர் திடீரென மயங்கி கீழே விழுந் துவிட்டார். சிறிது நேரத்திற்குபின்பு குளச்சல் 108 ஆம்புலன்ஸ் வரவளைக்கப்பட்டு அவ ருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மாசிகொடைவிழாவின் போது மண்ø டக்காட்டில் அமைக்கப்படும் மருத்துவ முகாமை பக்தர்கள் நலன்கருதி முன்கூட்டியே அமைத்து பக்தர்களுக்கு எளிதில் மருத்து வசேவைகிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார் ப்பாக உள்ளது.