காமாட்சி அம்மன் மாசித்திருவிழா
ADDED :5012 days ago
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிசட்டி, குழந்தையை தொட்டில் கட்டி தூக்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி சிவராத்திரி திருவிழா துவங்கியது.தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். பக்தர்கள் மஞ்சளாற்றங்கரையில் இருந்து அக்னி சட்டி, காவடி மற்றும் குழந்தையை தொட்டில் கட்டி தூக்கி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.