உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொண்டிபாளையத்தில் 13ல் தேர்த்திருவிழா

மொண்டிபாளையத்தில் 13ல் தேர்த்திருவிழா

 அன்னுார்:மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில், 55ம் ஆண்டு தேர்த்திருவிழா வரும், 13ம் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது.வரும், 14ம் தேதி காலை, 7:00க்கு பெருமாளுக்கு காப்பு கட்டுதல், கருடாழ்வார் திருமஞ்சனம், கொடியேற்றம் நடக்கிறது. இரவு, 8:00க்கு அன்ன வாகனத்தில் சுவாமி உலா நடக்கிறது. அதன் பின், 17 வரை, தினமும் காலை, 8:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.வரும், 18 காலையில் அம்மன் அழைத்தல், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருள்கிறார். காலை, 11:00க்கு தேரோட்டம் நடக்கிறது. 22 இரவு தெப்பத்திருவிழா, 23ல் மஞ்சள் நீராடுதல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !