மகரசங்கராந்தி : பக்தர்கள் புனித நீராடல்
ADDED :2534 days ago
புதுடில்லி : மகரசங்கராந்தியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நதிகளில் மக்கள் புனிதநீராடி வருகின்றனர். உ.பி., பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், வாரணாசி கங்கை நதி, கங்கா சாகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே புனிதநீராடி வருகின்றனர். கோரக்பூர் கோரக்நாத் ஆலயத்தில் மகரசங்கராந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது.