மொடக்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் கல்யாணம்
ADDED :2459 days ago
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், கஸ்பாபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் உற்சவ கல்யாணம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம், ஆராதனை நடந்தது.
மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரி யார் பார்த்தசாரதி, வெங்கடேசன் செய்தனர்.