ஈரோடு கொங்கலம்மன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
ADDED :2459 days ago
ஈரோடு: ஈரோடு, கொங்கலம்மன் கோவிலில், தைப்பூசத் தேரோட்டம், கடந்த, 12ம் தேதி இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
காவிரி ஆற்றில் இருந்து, நேற்று (ஜன., 13ல்) தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அபிஷேகம் செய்யப் பட்டு, கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இன்று 14 முதல், 18ம் தேதி வரை, தினமும் மாலையில் அம்மன் புறப்பாடு நடக்கும். 19ல் பொங்கல் மற்றும் மாவிளக்கு, 21ல் காலை, 9:15 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து கொங்கலம்மன் கோவில் உள்ள கடைவீதி, மாவிலை தோரணங்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது.