ஈரோட்டில் திருமுறை ஒப்புவித்தல்; மாணவர்கள் அசத்தல்
ADDED :2532 days ago
ஈரோடு: ஈரோட்டில் நடந்த, திருமுறை ஒப்புவித்தல் போட்டியில், 250 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஈரோடு அருள்நெறித் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில், திருமுறை ஒப்புவித்தல் போட்டி, மூன்றாமாண்டாக ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று (ஜன., 13ல்) நடந்தது.
ஒன்று முதல் ஐந்ததாம் வகுப்பு வரை ஒரு பிரிவு, ஆறு முதல் பத்தாம் வகுப்புவரை ஒரு பிரிவு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு ஒரு பிரிவு என, மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். திரும்வெம்பாவை, திருவாசகத்தில் சிவபுராணம், திருஞான சம்பந்தர் அருளிய திருநீற்றுபதிகம், திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப்பதிகம், திருநாவுக்கரசரின் நமசிவாய பதிகம், சுந்தரரின் திருத்தொண்டத் தொகை ஆகியவற்றின் இருந்து, பாடல்களை பாடி அசத்தினர். சிறப்பாக பாடிய, ஒன்பது பேருக்கு, பரிசு வழங்கப்பட்டது.