கிருஷ்ணராயபுரம் சிவன் கோவிலில் மார்கழி பூஜை
ADDED :2530 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவிலில், மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், மார்கழி மாதத்தில், தினமும் காலையில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜைக்கு பழையஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் உள்ள மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.