உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அருகே, தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கரூர் அருகே, தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கரூர்: கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூச திருவிழா வரும், 21ல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று (ஜன.,13ல்) காலை, 11:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நண்பர்கள் குழு சார்பில், பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வரும், 21 வரை, முருகப் பெருமானுக்கு பல்வேறு அலங்காரத்தில் திருவீதி உலா, வரும், 19 காலை, சுவாமி திருக்கல்யாணம், அதைத் தொடர்ந்து, தைப்பூச திருநாளான, வரும், 21 மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம், 22ல் தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !