உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் சிற்றாலய திருவிழா கோலாகல துவக்கம்

குன்னூர் சிற்றாலய திருவிழா கோலாகல துவக்கம்

குன்னூர்:குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள குழந்தை ஏசு சிற்றாலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருப்பலி நடந்தது.

தினமும் மாலை 6:30 மணிக்கு நவநாள் வழிபாடு நடக்கிறது. இன்றும், 18, 19ம் தேதிகளில், மாலை 6:00 மணிக்கு சிறப்பு நவநாள், திருப்பலி நடக்கிறது. 20ம் தேதி காலை 11:30 மணிக்கு சிறப்பு திருப்பலி, தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசிர்வாதம், அன்பின் விருந்து நடக்கிறது. 21ம் தேதி திருப்பலி, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !