உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் அந்தோணியார் திருவிழா மீனவர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரத்தில் அந்தோணியார் திருவிழா மீனவர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீட்டரில், அதாவது, 14 கடல் மைல் தூரத்தில், பாக்ஜலசந்தி கடல் நடுவே, கச்சத்தீவு உள்ளது. இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, 1974ல் இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பின், இலங்கை வசமாகியது.

இருப்பினும், இத்தீவில் உள்ள அந்தோணியார் சர்ச் விழாவில், தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கேற்றனர். இலங்கையில், 1982க்கு பிறகு, இனப்போர் தீவிரமடைந்ததும், கச்சதீவு விழாவுக்கு இலங்கை தடை விதித்தது.அதன்பின், 2006ல் இலங்கையில் அமைதி திரும்பியதும், 2010 முதல் தொடர்ந்து திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை மீனவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்தாண்டில், மார்ச், 15ல் கச்சத்தீவு சர்ச்சில் கொடி ஏற்றப்பட்டு, மார்ச், 16ல் திருவிழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, மார்ச், 15ல் ராமேஸ்வரத்தில் இருந்து, 63 படகுகளில், மீனவர்கள், பக்தர்கள் கச்சத்தீவு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !