உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுற்றுலா

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சுற்றுலா

இந்த மாதம் தொடக்கத்திலும், இறுதியிலும் அதிக நன்மையைக் காணலாம். அதற்கு காரணம் புதன் ஜன.16 வரையும், பிப்.1க்கு பிறகும் நன்மை கொடுப்பார். சுக்கிரன் ஜன.30 வரை நன்மையை வாரி வழங்குவார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இது மிக சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும்.  பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.   

புதனால் ஜன. 16 வரை எடுத்த செயல் வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும். அதன்பின் புதன் சாதக மற்ற நிலையில் இருப்பதால்  மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். ஜன.21,22ல் சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.  ஜன.17,18ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். ஆனால் ஜன.27,28,29ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மாத முற்பகுதியில் சுக்கிரனால் பெரியோரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  மனதில் பக்தி உணர்வு மேலோங்கும்.  குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள்.

பணியாளர்கள்  சிறப்பான வளர்ச்சி காண்பர். சிலர் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜன.15,16ல் கோரிக்கைகள் நிறைவேறும். அதன் பிறகு கடின உழைப்பு வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு தகுந்த வருமானம் கிடைக்கும். பிப்.1க்கு பிறகு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
ஜன.15,16, பிப்.1,2ல் திடீர் வருமானத்தை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு அதிகப் பணம் புழங்கும். கூட்டாளிகள் உதவிகரமாக செயல்படுவர். பிப்.1,2 ல் மறைமுக எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் சிறக்கும்.  
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர்.  
ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு உயரும். சககலைஞர்களின் ஆதரவு உண்டு. ஜன.30க்கு பிறகு முயற்சியில் தடை, மனதில் சோர்வு ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.  

மாணவர்கள் ஜன.17க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பிப்.1க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆசிரியர்கள், பெற்றோர் ஆதரவு  வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. மஞ்சள்,கரும்பு,நெல், சோளம் போன்ற பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். உங்களால் குடும்பத்திற்கு பெருமை கிடைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்வில் குதூகலம் காண்பர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். பிப்.3,4,5 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  ஜன.25,26 ல் எதிர்பார்ப்பு தடையின்றி நிறைவேறும். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிப்.1 வரை வேலைப்பளு அதிகரிக்கும்.  அதுவரை அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.

ஜனவரி 31க்கு பிறகு செவ்வாயால் அக்கம்பக்கத்தினர் வகையில் தொல்லை ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. ஜன.31க்கு பிறகு செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான
நோய் வரலாம் கவனம்.

* நல்ல நாள்: ஜன.15,16,17, 18,21,22,25,26, பிப்.1,2,3,4,5,11,12
* கவன நாள்: பிப்.6,7 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: கருப்பு, மஞ்சள்

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
●  திருவாதிரையன்று ராமானுஜருக்கு நெய்தீபம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !