திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
வில்லியனூர்:திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில், மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு மற்றும் அஷ்டோத்தர சத கலச அபிஷேக விழா நேற்று (ஜன.,17ல்) நடந்தது.
திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான சம்பத் சராபிஷேகம் 3ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு மற்றும் 108 கலச அபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 16ல்) மாலை, விக்னேஸ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று (ஜன., 17ல்) காலை 8;00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், 9:30 மணியளவில் மகா அபிஷேகமும், 10:30 மணிக்கு கடம் புறப்பாடு, 11;00 மணியளவில் அனைத்து பரிவாரங் களுக்கும் கலசாபிஷேகமும், கங்கை வராக நதீஸ்வரருக்கு 108 கலச அபிஷேகமும், காமாட்சி, மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் முன்னிலையில் சிவாச்சார்யார் சரவணன் தலைமையில் கிராம வாசிகள் செய்திருந்தனர்.