உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அடுத்த தாமலில் காணும் பொங்கல் அம்மன் திருவிழா விமரிசை

காஞ்சிபுரம் அடுத்த தாமலில் காணும் பொங்கல் அம்மன் திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்: தாமல் கிராமத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு, மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று (ஜன., 17ல்) விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில், ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று, அங்குள்ள மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று (ஜன., 17ல்) நடந்த இந்த திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து, வேண்டுதல் நிறைவேற்றினர். தாமல் கிராமத்தின் மந்தையில் உள்ள மண்டபத்தில் அம்மன் மாலையில் எழுந்தருளினார்.இந்த திருவிழாவை காண சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.இரவு மண்டபத்தில் அமர்ந்துள்ள அம்மனுக்கு மாலை போடுதல் நிகழ்ச்சி முடிந்ததும், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன், அக்கிராமத்தின் தெருக்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !