மலைக்கோயில் பிரபலம் ஏன்?
ADDED :2848 days ago
தை பவுர்ணமியன்று தைப்பூச விழா நடக்கும். இந்நாளில் மலையைச் சுற்றினால் நிலவின் குளிர்ச்சியான கதிர்கள் உடலில் படுவதால் மனோசக்தி அதிகரிக்கும். இதனால் செய்யும் செயல், தொழிலில் வெற்றி கிடைக்கும். தை பவுர்ணமியில் சூரியனும், சந்திரனும் பலம் பெறுகின்றனர். தெய்வீக சக்தி மிக்க மலைக்கோயில்களில் நிலவின் ஒளியை உடம்பில் படரச் செய்தால் உடல்நிலை மேம்படும். இதன் அடிப்படையில் தைப்பூசத்தை வழிபாட்டுக்குரியதாக தேர்ந்தெடுத்தனர்.