சிவகங்கை குளத்தில் பஞ்சமூர்த்திகளின் தீர்த்தவாரி
ADDED :2563 days ago
சிதம்பரம்:தை பூசத்தையொட்டி நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் பஞ்சமூர்த்திகளின் தீர்த்தவாரி சிறப்பு ஆராதனை நடந்தது.இதனையொட்டி நேற்று (ஜன., 21ல்) காலை சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜர் பெருமான் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
பின்னர் பஞ்சமூர்த்திகள் கோவில் சிவகங்கை குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பஞ்சமூர்த்தி களின் தீர்த்தவாரி, தீபாராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து வியாக்கிரபாதருக்கு நடராஜர் கயிலையில் இருந்து காட்சியருளி தரிசனம் தந்த உற்சவம் நடந்தது.