உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது?

அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது?

கடலுா : கடலுார் அக்னீஸ்வரர் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடப்பது எப்போது என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.கூவத்துார் அடுத்த, கடலுாரில், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, அக்னீஸ்வரர் - சொக்கநாயகி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலை, சூணாம்பேடு, ஜமீன் பரம்பரையினர், அறங்காவலராக நிர்வகிக்கும் சூழலில், நீண்ட காலம் பராமரிப்பின்றி, முற்றிலும் சீரழிந்து உள்ளது. கோவிலுக்கு, பல நுாறு ஏக்கர் விவசாய நிலம் இருந்தும், குத்தகை பெற்றவர்கள், முறையாக செலுத்தவில்லை என, கூறப்படுகிறது.இதுகுறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன், அறங்காவலர் தரப்பினர், சொந்த செலவில், புனரமைப்பு செய்தனர்.தற்போது, கோவில் கட்டுமானம் முடித்து, வண்ணம் தீட்டிய நிலையில், பிற பணிகள் முடிக்காமல், பல மாதங்களாக, கிடப்பில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !