சோழவந்தான் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2454 days ago
காடுபட்டி : சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் அக்ரஹாரத்தில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இங்குள்ள காசிவிஸ்வநாதர் விசாலாட்சி கோயில் வடக்கில் சுந்தரராஜப்பெருமாள், சுந்தரவள்ளி,வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், பைரவர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய யாகசாலைபூஜைகள்பாலாஜி பட்டர் தலைமையில் ஜன., 21 துவங்கியது. நேற்று முன் தினம் மாலை சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்தனர்.