உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வபுரம் சித்தி விநாயகர் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா

செல்வபுரம் சித்தி விநாயகர் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா

பேரூர்: செல்வபுரம் சித்திவிநாயகர் கோவிலில், தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை இசை விழா நடந்தது.செல்வபுரம் முத்துச் சாமி காலனி சத்சங்கம் சார்பில், சித்திவிநாயகர் கோவிலில், தியாகராஜர் ஆராதனை இசை விழா நேற்று (ஜன., 27ல்) நடந்தது.

காலை, 9:00 மணிக்கு தியாகராஜரின் உருவப்படத்துக்கு, அவரின் திருநாமங்களை கூறி, அர்ச்சனை செய்யப்பட்டது.தொடர்ந்து, இசை ஆசிரியர் இந்துமதி தலைமையில், வனஜா, பிரேமா, பாலா, காயத்ரி, வித்யா, கிரிஜா உள்ளிட்டோர், தியாகராஜ சுவாமிகள் இயற்றிய, பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர்.

பத்மநாபன்(மிருதங்கம்) ரவி(வயலின்), பிரபு(வீணை) ஆகியோர், பக்கவாத்தியம் வாசித்தனர். மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, கீதாஞ்சலி நடந்தது.இதில், தியாகராஜ சுவாமிகள்
இயற்றிய, கீர்த்தனைகளை இளம் இசைக்கலைஞர்கள் இசைத்தனர். பின்னர், ஆஞ்சநேயர் உற்சவத்துடன் இசை விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !