ஆனிக்கல் மாரியம்மன் பூகுண்டம்: வனப்பகுதியை காக்க பக்தர்கள் ஒத்துழைப்பு தேவை!
ஊட்டி : அருள்மிகு ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா 26ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. ஊட்டி அருகே எப்பநாடு அருள்மிகு ஆனிக்கல் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் 26ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 27ம் தேதி காலை 10.00 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டுவரப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, 4 மணிக்கு அம்மன் அலங்கார ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன. 4.30 மணிக்கு அன்னதானம், இரவு 8.00 மணிக்கு எப்பநாடு கள்ளிமொரா வேல்முருகா நாடக சபாவின் சுவாமி ஐயப்பா புராண நாடகம் படுகு மொழியில் நடக்கிறது. 28ம் தேதி அதிகாலை பூகுண்டம் திறக்க சிறப்பு பூஜை, காலை 8.00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல், 11 மணிக்கு திருவிழா நிறைவு பூஜை ஆகியவை நடக்கிறது. "ஊட்டியில் இருந்து கல்லட்டி, வாழை தோட்டம் வாகனத்தில் செல்லும் பக்தர்களும், எப்பநாட்டில் இருந்து வனப்பகுதி வழியாக 8 கி.மீ., தூரம் நடந்து செல்லும் பக்தர்களும் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்; விழா நாட்களில் மது அருந்தவோ, விற்கவோ கூடாது, என வனத் துறை, போலீசார் சார்பில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.