தில்லைக்காளி கோவிலில் அர்த்தசாம சிறப்பு பூஜை
ADDED :4942 days ago
சிதம்பரம்:சிம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் 128வது மாத அர்த்த ஜாம பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.தில்லை காளியம்மனுக்கு எண்ணெய் அபிஷேகம், தைலகாப்பு குங்கும காப்பு செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அண்ணாமலைப் பல்கலை இணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வேலன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.பல்கலை தனி அதிகாரிகள் கிருஷ்ணகுமார், ஜெகதீசன், ஓய்வுபெற்ற துணை பதிவாளர்கள் ராமமூர்த்தி, சீனுவாசன், பேராசிரியர் கார்த்திகேயன், அருள், சின்னையன், மோகன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.