விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை வழிபாடு
திருப்பூர்: திருநீலகண்ட நாயனார் குருபூஜையை விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருநீலகண்டர் குருபூஜை விழா, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், இருந்து சந்திரசேகரமும், திருநீலகண்டரும், குலாலர் மண்டபத்துக்கு எழுந்தருளினர். அங்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரபூஜையும், சிவனடியாருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில், மேள, தாளத்துடன், உற்சவமூர்த்திகள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.< திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று அர்த்தசாமபூஜை அடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், திருநீலகண்டர் குருபூஜை விழா நடந்தது. மூலவர் மற்றும் உற்சவ நீலகண்டருக்கு, அபிேஷகமும், அலங்காரபூஜையும் நடந்தது. சப்பரத்தில், கோவிலை வலம் வந்த திருநீலகண்டர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.