திருப்போரூர் கோவில் கும்பாபிஷேகம் அறநிலைய துறை நடத்துமா?
ADDED :2453 days ago
திருப்போரூர்: சிறுங்குன்றம் விநாயகர் கோவிலை, அறநிலையத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கம் அடுத்த, சிறுங்குன்றத்தில், புராதன வரலாற்று சிறப்புடைய விநாயகர் கோவில் உள்ளது.நீண்ட காலமாக பராமரிப்பற்ற நிலையில் உள்ள இக்கோவில் வளாகத்தில், செடிகள் வளர்ந்துள்ளன. அர்ச்சகர் ஒருவர், பூஜை மேற்கொண்டு வருகிறார்.கோவில் திருப்பணி மேற்கொண்டு, இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.