உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் விவேகானந்தர் சிலை திறப்பு

திருக்கோவிலூர் விவேகானந்தர் சிலை திறப்பு

திருக்கோவிலூர்:மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தர் சிலை திறப்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் முருகன் வரவேற்றார்.

சென்னை ராமகிருஷ்ண மட மேலாளர் சுவாமி விமுர்தானந்தஜி மகராஜ், விவேகானந்தர் சிலையை திறந்து வைத்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கை ஆசிரியர் சுவாமி அபவர் கானந்தஜி மகராஜ் சுவாமி அசோக்மகராஜ் வாழ்த்திப் பேசினர்.

தொடர்ந்து நடந்த  அறிவியல் கண்காட்சியில், சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆடிட்டர் ஸ்ரீதரன் ஸ்பென்சர் பிளாசா உரிமையாளர் பாலசுப்ரமணியன் விழுப்புரம் சாரதா வித்யாலயா பள்ளி நிர்வாகி ராஜேந்திரன் பேசினர்.விவேகானந்தா நர்சரி பள்ளி முதல்வர் ஜெயப்பிரியா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி முதல்வர் இந்திரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !