உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம், உற்சாகத்துடன் வந்த கோயில் யானை ராமலெட்சுமி

ராமேஸ்வரம், உற்சாகத்துடன் வந்த கோயில் யானை ராமலெட்சுமி

ராமேஸ்வரம்: கோவையில் புத்துணர்வு முகாமை முடித்து ராமேஸ்வரம் கோயில் யானை ராமலெட்சுமி உற்சாகத்துடன் வந்தது.

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகில் தேக்கம்பட்டியில் தமிழக இந்து அறநிலையத் துறை கோயில் யானைகளுக்கு டிச.,14ல் புத்துணர்வு முகாம் துவக்கியது. இம்முகாமில் பங்கேற்க டிச.,12ல்  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமலெட்சுமி யானை லாரியில் புறப்பட்டுச் சென்றது.

முகாமில் யானைகளுக்கு இயற்கை சூழலுடன் கூடிய வனப்பகுதியில் உலா, ஆற்றில் குளியல், கரும்பு, சோளப் பயறு, ஊட்டசத்து மாவு, லேகியம் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கி மருத்துவ பரிசோதனை செய்தனர்.  கடந்த 45 நாட்கள் நடந்த முகாமில் புத்துணர்வு பெற்ற யானைகளுக்கு ஜன.,30ல் முகாம் முடிந்தது.

ராமேஸ்வரம் கோயில் யானை 100 கிலோ கூடுதலாக (3800 கிலோ) இருந்தது. தேக்கம்பட்டி யில் இருந்து லாரியில் புறப்பட்டு நேற்று ஜன.,31ல் அதிகாலை ராமேஸ்வரம் கோயிலுக்கு உற்சாகமாக வந்த யானைக்கு, கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினார். கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப் பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !