உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை அருகே முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை அருகே முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை:சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் மூலக்கரை முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷே கம் நடந்தது.

இதையொட்டி பிப்., 1 மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத் துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு முதல்கால யாக பூஜை நடந்தது. பிப்., 2 காலை இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. மாலை 3:00 மணிக்கு எந்திஸ் தாபனம், மருந்து சாற்றுதல், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடந்தன. நேற்று (பிப்., 3ல்) காலை நான்காம்கால யாக பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தன.

காலை 9:50 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அம்பல காரர்கள், கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !