நாபிக்கமலம் இல்லாத நாராயணன்!
ADDED :2549 days ago
பொதுவாக சயனக் கோலத்தில் உள்ள பெருமாளின் நாபியில் இருந்து தாமரை தோன்றும் அதில் பிரம்மா அமர்ந்திருப்பார். ஆனால் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பெருமாள் நாபியிலிருந்து தாமரைப்பூ தோன்றவில்லை. பிரம்மனுக்காக கேசி என்ற அரக்கனை வதைத்து அவன் மீது பெருமாள் சயனித்திருப்பதுதான் அதற்குக் காரணமாம்.