முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
ADDED :4986 days ago
அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட அமுதவல்லியம்மன் சமேத அமுத லிங்கேஸ்வரர் முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. முத்து மாரியம்மன் கோயிலுக்கு புதிய தேர் வடிவமைக்கப்பட்டது. இந்த தேர் 21 அடி உயரம் உள்ளது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் நான்கு ரதவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பல்வேறு காணிக்கைகளை செலுத்தியும்,சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கண்ணன்,திருவிழா திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.