மாசாணியம்மன் கோவிலில் பசுமை திட்டம்
ஆனைமலை : மாசாணியம்மன் கோவிலில் பசுமை திட்டத்தின் கீழ் 64 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச்செயலாளர் அப்புச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிவாசு, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாசாணிம்மன் கோவிலில் அ.தி.மு.க.,சார்பில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி இதில் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மற்றும் அ.தி.மு.க., சார்பில் கோடை காலம் முடியும் வரை நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்படுகிறது. வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழாவிற்காக, கிணத்துக்கடவு முருகன் கோவிலுக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள் தலைமையில் 64 பால்குடம் எடுத்துசென்று வழிபட்டனர்.