திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் புடவைகளை ஏலம் விட கோரிக்கை
ADDED :2432 days ago
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கியுள்ள புடவைகளை, மாசி கிருத்திகை நாளில் ஏலம் விட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள், கந்தசுவாமிக்கு ஜரிகை வேட்டி, துண்டுகளையும், வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு புடவைகளையும் சார்த்துகின்றனர். நித்ய வழிபாட்டு தேவைக்கு போக, 400க்கும் மேற்பட்ட புடவை, வேட்டிகளை கோவில் நிர்வாகம் சேகரித்து, பாதுகாப்பாக வைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக அவை ஏலம் விடப்பட வில்லை. வரும், 12ம் தேதி, பிரம்மோற்சவ மாசி கிருத்திகை விழாவிற்கு, 50 ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் வருவர். அந்நாளில் ஏலம் விட, கோவில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.