திண்டிவனத்தில் 16ம் தேதி லட்சுமிஹயக்ரீவர் ஹோமம்
ADDED :2430 days ago
திண்டிவனம்:திண்டிவனத்தில் வரும் 16ம் தேதி, லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நேற்று (பிப்., 12ல்) நிருபர்களிடம் கூறியதாவது:உலக மக்கள் நலன், மழை வேண்டியும்; இந்து மக்கள் ஒற்றுமைக் காகவும், மாணவர்களின் கல்வி நலன் மேம்படவும் வரும் 15ம் தேதி மாலை 6:00 மணியளவில் திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் உள்ள தாகூர் மேல்நிலைப் பள்ளியில் லட்சுமி பூஜை (திருவிளக்கு பூஜை) நடைபெற உள்ளது.
தொடர்ந்து 16ம் தேதி காலை 8:00 மணியளவில் லட்சுமி ஹயக்ரீவர் பூஜையும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.தாகூர் கல்விக்குழுத் தலைவர் ராஜாபாதர் உடனிருந்தார்.