உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

புதுச்சேரி: கருவடிக்குப்பம், சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. கருவடிக்குப்பத்தில் உள்ள சித்தானந்த சுவாமி கோவிலில் உள்ள சுந்தர விநாயகர் சன்னதியில், மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று மாலை 4:30 மணிக்கு, கலச பிரதிஷ்டை செய்யப்பட்டது. 5:30 மணிக்கு, மகா கணபதி ஹோமம் நடந்தது. இதைதொடர்ந்து, சுந்தர விநாயகருக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகருக்கு, 1008 கொழுக்கட்டைகள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !