உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச ஆரண்ய தரிசனம்

பஞ்ச ஆரண்ய தரிசனம்

ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய ’பஞ்ச ஆரண்யத் தலங்கள்’ என்று ஐந்து கோயில்கள் உள்ளன. ’பஞ்ச’ என்றால் ஐந்து. ’ஆரண்யம்’ என்றால் காடு. இதில் முல்லைவனம் என்னும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் முதலிடம் பெறுகிறது.  அதிகாலை 5.30 – 6.30க்குள் இங்கு தரிசிக்க வேண்டும். பின்  காலை 8.30 –9.30க்குள் அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத சாட்சிநாதர் (பாதிரி வனம்), பகல் 11.00 – 12.30க்குள் அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் (வன்னி வனம்), மாலை 5:00 – 6:00க்குள் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (பூளை வனம்), இரவு 7.30 – 8.30க்குள் திருக்கொள்ளம்பூதூர் வில்வ வனநாதரை தரிசிக்க வேண்டும்.  ஒரே நாளில் தரிசித்தால் பாவம் நீங்கி பிறவியற்றநிலை உண்டாகும். கும்பகோணம் அல்லது தஞ்சாவூரில் இருந்து செல்வது எளிது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !