மாசாணியம்மனுக்கு ரூ.55 லட்சம் காணிக்கை
ADDED :2446 days ago
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
நிரந்தர உண்டியல்களில், 44 லட்சத்து, இரண்டாயிரத்து, 271 ரூபாய்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 859 ரூபாய் காணிக்கை இருந்தது. 193.5 கிராம் தங்கம் மற்றும், 525 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.இதில், மாசாணியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஆனந்த் தலைமை வகித்தார்.கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணிக்கையை கண்காணித்தனர். மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் நடந்ததால், அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்து, மொத்தம், 55.58 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.