உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஏற்பாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஏற்பாடு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மார்ச் 4 ல் இரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய அம்மன், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது.


அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பூக்கள், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர பொருட்களை மார்ச் 4 க்குள் கோயிலின் உள் துறை அலுவலகத்தில் வழங்கலாம். பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !