உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: பூவோடு எடுத்து வழிபாடு

பொள்ளாச்சி மாரியம்மன் திருவிழா: பூவோடு எடுத்து வழிபாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கோவிலில், திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு, மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 12ம் தேதி தேர்த்திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 18ம் தேதி அணி எடுப்பு நிகழ்ச்சியும்; 19ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரிய காளியம்மன் அபிஷேகமும், இரவு, 11:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. கடந்த, 26ம் தேதி கோவில் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.


பக்தர்கள் பூவோடு ஊர்வலம், தெப்பக்குளம் வீதி வழியாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றது. இன்று கொடி கட்டுதல்; 3ம் தேதி ஏ.பி.டி., பூவோடு எடுத்தல், 5ம் தேதி இரவு அபிஷேகம்; 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டத்தை தொடர்ந்து, அம்மன் பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது.9ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 11ம் தேதி மகா அபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !