உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்

சேலம் சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தெப்போற்சவம்

சேலம்: சேலம், சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று (மார்ச்., 4ல்) நடந்த தெப்போற்ச வத்தில், திரளாக பக்தர்கள் வழிபட்டனர். சேலம், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் கல்யாண உற்சவம் கடந்த வாரம் துவங்கி நடந்து வருகிறது.

இதில், கருடசேவையை தொடர்ந்து நேற்று முன்தினம் (மார்ச்., 3ல்), ஸ்ரீனிவாச கல்யாண உற்சவத்தில், பெருமாள், அலமேலு மங்கை தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று (மார்ச்., 4ல்)நடந்த தெற்போற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !