நாமக்கல் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
ADDED :2451 days ago
நாமக்கல்: ஏ.கே., சமுத்திரம் ஆவுடையார் கோவிலில், சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் அருகே, ஏ.கே.,சமுத்திரம் மூணுசாவடியில் அமைந்துள்ள சதுர்வேதநாதர் (எ) ஆவுடையார் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) இரவு முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை என சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (மார்ச்., 5ல்) அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை துவங்கியது. இதையடுத்து ஆவுடையார்க்கு எண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், அரிசி மாவு கரைசல், மஞ்சள், திருநீறு, சந்தனம் உள்ளிட அபிஷேகங்கள் நடந்து, தீபாராதனை செய்யப்பட்டது. இதில், ஏராளமானோர் சிவபெருமானை வழிபட்டனர்