உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் அங்காள பரமேஸ்வரிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜை

நாமக்கல் அங்காள பரமேஸ்வரிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜை

நாமக்கல்: நாமக்கல், அங்காள பரமேஸ்வரி கோவிலில், மஹா சிவராத்திரி திருவிழா நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் அருகே, கோட்டை தாந்தோணி தெருவில் அமைந்துள்ள பெரியாண்டவர், அங்காளபரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடந்தது.

பழமையான கோவிலில், சிவராத்திரியையொட்டி, மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். கடந்த, 4 காலை, 5:00 மணிக்கு சக்தி அழைத்தல் மற்றும் கன்னி மார்பூஜையுடன் திருவிழா தொடங்கி, மாலையில் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கரும்பு பந்தல் அமைத்து, இரவில் அம்மன் பூஜை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். நேற்று (மார்ச்., 5ல்)காலை, முனியப்பன் பூஜை புறப்பாடு, மதுரை வீரன் பூஜை நடந்தது. இன்று (மார்ச்., 6ல்) காலை, கருப்பணார் சுவாமிக்கு பூஜை நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !