உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அடுத்த மேட்டுமருதூரில் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

குளித்தலை அடுத்த மேட்டுமருதூரில் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டுமருதூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான நேற்று (மார்ச்., 6ல்) காலை, தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிவழியாக சென்று, மாலையில், தேர் நிலை சேர்ந்தது.

இதில், சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து, கோவில் குடிபாட்டுக்காரர்கள், கிராம பொது மக்கள் பங்கேற்றனர். இரவு சிம்ம வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று (மார்ச்., 7ல்) காலையில் கிடாவெட்டு, மதியம் பொது விருந்து நடைபெறும் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !