உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை கடம்பவனேஸ்வர் கோவிலில் திருமண மண்டபம் திறக்க எதிர்பார்ப்பு

குளித்தலை கடம்பவனேஸ்வர் கோவிலில் திருமண மண்டபம் திறக்க எதிர்பார்ப்பு

குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் உள்ள, பாலகுஜலாம்பாள் திருமண மண்டபத்தில், குறைந்த கட்டணம் செலுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டு விஷேசங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, திருமண மண்டபம் வாடகைக்கு வழங்காமல், பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குளித்தலை சுற்றியுள்ள ஏழை மக்கள், வீட்டு விஷேசங்களை, அதிக தொகை கொடுத்து தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டியுள்ளது.
கிராம மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், திருமண மண்டபத்தை பயன்பாட்டுக்கு திறக்க, இந்து சமய இறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் கூறுகையில், "மண்டபத்தின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் மண்டபம் சீரமைக்கப்பட்டு, பின் திறக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !