உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னவாகனத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா

அன்னவாகனத்தில் ஸ்ரீவி., ஆண்டாள் உலா

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் திருக்கல்யாணத்தின் 5ம் திருநாளை முன்னிட்டு, கருட வாகனத்தில் ரெங்கமன்னார், அன்னவாகனத்தில் ஆண்டாள் எழுந்தருளினர்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா மார்ச் 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 21 மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு திருவீதி உலா நடக்கிறது. 5ம் திருநாளை முன்னிட்டு, கருட வாகனத்தில் ரெங்கமன்னார், அன்னவாகனத்தில் ஆண்டாள் எழுந்தருளி பக்தர்களுக்க அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்ச் 21 காலை 7:35 மணிக்கு செப்புதேரோட்டம், மாலை 6:40 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !