பொள்ளாச்சியில் வளர்பிறை ஏகாதசி விழா
ADDED :2765 days ago
பொள்ளாச்சி:ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு, பால் தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் என ஒன்பது வகையான அபிஷேகமும், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜையும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.