மஞ்சள் கயிறில் தாலி போடுங்க!
ADDED :2790 days ago
ஹயக்ரீவ மூர்த்தியால் அகத்தியருக்கு உபதேசிக்கப் பட்டது லலிதா சகஸ்ரநாமம். அம்பிகையின் மகிமையைப் போற்றும் அதில், ‘காமேச பந்த மாங்கல்ய சூத்ர சோபிதா கந்தரா’ என்று அம்பிகை போற்றப் படுகிறாள். ‘சிவபெருமானால் கட்டப்பட்ட திருமாங்கல்யச்சரடு அலங்கரிக்கும் அழகான கழுத்தை உடையவள்’ என்பது இதன் பொருள். ஆயிரமாயிரம் ஆபரணங்களை அணிந்தாலும் அம்பிகைக்கு அழகு சேர்ப்பது அந்த மாங்கல்யம் சூடியிருக்கும் மஞ்சள் கயிறு தான். ஆதிசங்கரரும், சவுந்தர்யலஹரியில் அம்பிகையின் திருமாங்கல்யத்தின் மகிமையைப் போற்றியுள்ளார். தங்கச்சங்கிலி அணிந்தாலும், சம்பிரதாயத்தின் சின்னமான மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யத்தைக் கட்டிக்கொள்வதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.