கிருஷ்ணரின் பி.ஏ
ADDED :2790 days ago
குருக்ஷேத்திர யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணர் தர்மருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார். தன் நாடான துவாரகைக்குச் சென்று 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினார். அவருக்கு 125 வயது ஆனது. பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் செல்வது குறித்து திட்டமிட்டார். இதை அறிந்த கிருஷ்ணரின் நண்பரும், உதவியாளருமான உத்தவர், “கிருஷ்ணா! வைகுண்டம் புறப்பட தீர்மானித்து விட்டீர்கள்! உங்களைப் பிரிந்து எப்படி வாழப் போகிறேன்? எனக்கு நல்வழி காட்ட யார் இருக்கிறார்கள்?,” என்று வருந்தினார். அப்போது உத்தவருக்கு அருளிய உபதேசமே உத்தவகீதை. பாகவதத்தின் பதினோராம் அத்யாயத்தில் இடம் பெற்றுள்ள இந்த கீதை பக்திவழியில் முக்தியடைய வழிகாட்டுகிறது. உத்தவரின் கேள்விகளுக்கு, கிருஷ்ணர் பதில் சொல்வது போன்ற உரையாடல் பாணியில், உத்தவகீதை அமைந்துள்ளது.