கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2436 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையடுத்து, தினமும் பல்வேறு வாகனத்தில், உற்சவர் திரு வீதி உலா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று 19ல், காலை, 11:00 மணிக்கு, கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். வரும், 22ல், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கோவில் அலுவலர்கள், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.