கீழக்கரை வைகையில் பங்குனி உத்திர விழா
கீழக்கரை: நேற்று (மார்ச்., 21ல்) காலை 10:30 மணிக்கு வைகை ஊரணிக்கரையில்உள்ள வன்னிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதியுலா நடந்தது. பகலில் அன்னதானமும், மாலை உலக நன்மைக்கான 108 விளக்கு பூஜையும் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை வைகை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
* தில்லையேந்தல் அருகே தட்டார்மடம் சுப்பிரமணிய சுவாமி கோயில் 87வது ஆண்டு பங்குனி உத்திர விழா கோலாகலமாக நடந்தது. மார்ச் 12 காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. பால்குடம், வேல் காவடி, சிலம்புக்காவடி ஆகியவற்றுடன் கீழக்கரை உக்கிர வீரமாகாளி யம்மன் கோயிலில் இருந்து தட்டார்மடம் வரை ஊர்வலம் வந்தது. அன்னதானம் நடந்தது.
இரவில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில்வாகனத்தில் முருகப்பெருமானும் வீதியுலா வந்தனர். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தினர் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.