ராமநாதபுரம் வழி விடும் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா
ADDED :2426 days ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் வழி விடும் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இரவு ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில் அரசு இசைப்பள்ளி முதல்வர் சு.மீனலோச்சனி இன்னிசைக் கச்சேரி நடந்தது. பக்கவாத்தி யமாக வயலின் இரா.தி.ஜெகதீசன், மதுரை சுந்தரேஸ்வரன் மிருதங்கம், பரத்வாஜ் மோர்சிங் இசைத்தனர். பக்தர்கள் கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதனை அடுத்து அடுத்த நாளில் சிலம்பொலி சிலம்பப்பள்ளி தலைவர் லோகுசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்களின் சிலம்பாட்டம், தீப் பந்தம் சுற்றுதல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.