உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலத்தில் பக்தர்களுக்கு மோர் லயன்ஸ் சங்கம் வழங்கல்

விருத்தாசலத்தில் பக்தர்களுக்கு மோர் லயன்ஸ் சங்கம் வழங்கல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 1,500 பேருக்கு இலவச நீர் மோர் வழங்கப்பட்டது.

லயன்ஸ் சங்கம், யூ சாக் அமைப்பு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆகியன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. லயன்ஸ் சங்கத் தலைவர் வக்கீல் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார்.

லயன்ஸ் சங்க செயலர் சீனு ரவீந்திரன், பானுமதி முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்கள் மூத்த வக்கீல் மெய்கண்டநாதன், அரசு வழக்கறிஞர் இளையராஜா ஆகியோர் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினர். நிகழ்ச்சியில், ஸ்டாலின், அருள் முருகன், உறுப்பினர்கள் கோதண்டபாணி, மதன், ராம்குமார், அன்புதாசன், ரஞ்சித், அகிலா, சத்யா, மருதுராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !