குரோம்பேட்டையில் சீதா கல்யாண மஹோத்ஸவம்
ADDED :2459 days ago
குரோம்பேட்டை: குரோம்பேட்டை, ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் , 31ம் தேதி காலை, ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
குரோம்பேட்டை, நேருநகர், பட்டேல் தெருவில், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, நாளையும், 31ம் தேதியும், ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெற உள்ளது. நாளை காலை, தோடய மங்களம் குரு கீர்த்தனைகள், பூஜை, தியானம், திவ்யநாமம், டோலோத்ஸவம் நடைபெற உள்ளது. 31ம் தேதி காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.தொடர்ந்து, மதியம் பக்தர்கள் அனைவருக்கும், கல்யாண விருந்தும், மாலை, 4:25 மணிக்கு, வஸந்த கேளிக்கை, பவ்வளிம்பு, ஸ்ரீ ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெற உள்ளது. உத்ஸவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.